மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம்  அமலுக்கு வருவதாக அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தப்பிறகும் கூட இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதால் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிளவுவாத சிஏஏ சட்டம் ஏற்புடையது அல்ல என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை கண்டித்திருக்கும் நடிகை கஸ்தூரி, “சரியான புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு அறிக்கை வெளியிடுவது நல்லதல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார். மாறாக, இங்குள்ள இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற திட்டமிட்ட பொய்யைதானே விஜய் கண்டித்திருக்க வேண்டும் என்றும் கஸ்தூரி சாடியிருக்கிறார்