
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு. இவர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில், முதல் டெஸ்ட் தொடர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக ஆண்டர்சன் அறிவித்துள்ளார். மேலும் அவருடைய முடிவு ரசிகர்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.