இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதல் 2 தொடர்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் மொத்தம் 22 வருடங்களாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில் மொத்தமாக 991 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டிகளில் 188 போட்டிகளில் விளையாடி மொத்தம் 704 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.