தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நேற்று  உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 தீர்மானங்களும் செல்லாது என்றும் கூறியதோடு அந்த 10 தீர்மானங்களுக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இதனால் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆளுநராக ரவி பணியாற்றி வரும் நிலையில் அவருடைய பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் புதிய ஆளுநராக விகே சிங் நியமிக்கப்படலாம் என்று தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.