
தமிழகத்தில் இன்று அங்கன்வாடி, பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களில் சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்தின் ஒளி. எனவே ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.