
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி சற்று முன் வெளியிட்டுள்ளது. 358 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 644 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விவரங்களையும் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.