
காஞ்சிபுரத்தில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் EPS முன் அதிமுகவில் இணைந்துக் கொண்டனர். அதோடு தேமுதிக, பாமக என பல கட்சிகளை சேர்ந்த சுமார் 200 பேர் ஒரே நாளில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளாரான பின் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு அதிமுக செயல்பட்டு வருகிறது.