
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளி மாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதாவது இமானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.