
மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் கலையரசன். இந்த படத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இறப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கலையரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலை.
இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திலும் கலையரசன், லாரி கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்து விடுவார். இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தில் கலையரசன் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலையரசன் பேசும்போது, தான் இதற்கு மேல் அதிகமான கேரக்டர்கள் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை என்றும் தமிழ் சினிமா தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
மலையாளத் திரை உலகில் ஒருவர் வில்லனாக நடித்தால் மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடிப்பார். ஆனால் தமிழ் படத்தில் ஒரு கதாபாத்திரம் நடித்து விட்டால் அதேபோன்ற கதாபாத்திரம்தான் அடுத்த படங்களிலும் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு படத்தில் ஒருவர் சாவது போன்று கதாபாத்திரம் வருகிறது என்றால் அதற்கு நான் தான் நடிக்க வேண்டும் என்று எழுதி விடுவார்கள் போல. இனி தேர்ந்தெடுக்கப்பட்ட குணச்சித்திர கதாபாத்திரம் மட்டும்தான் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.