
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எப்படியாவது இந்தி திணிப்பை தமிழகத்தில் புகுத்து விட வேண்டும் என்று பாஜக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை? த மிழகத்திற்கு ஏன் எந்த ஒரு திட்டமும் தரவில்லை? நாங்கள் தருகின்ற நிதியில் எங்களுக்கான பங்களிப்பை ஏன் தர மறுக்கிறீர்கள்? தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காக பீகாருக்கு சலுகையை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். சாகும் வரை காலில் நிச்சயம் செருப்பு அணியவே முடியாது, அவரால் எந்த காலத்திலும் திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.