
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேமுதிகவின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தனது X வலைதள பக்கத்தில் போட்ட பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த பதிவில் மதுரையில் நடைபெற்ற தேமுதிகவின் மாநாட்டில் 2.5 லட்சம் சேர்கள் மட்டுமே போடப்பட்ட நிலையில் 25 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/PremallathaDmdk/status/1850245158757183524