சர்வதேச யோகா தினம் வருகின்ற 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தவும் விழிப்புணர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலம் மும்பையில் ஒரு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு சுவாமி சிவானந்தா தாத்தா  கலந்து கொண்டார். இவருக்கு தற்போது வயது 127. இவர் அந்த நிகழ்ச்சியில் யோகாசனம் செய்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் அவருக்கு 127 வயது ஆன நிலையிலும் இதுவரை தன்னுடைய வேலைகளை தானாகவே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.