வங்கதேசம் தலைநகரான டாக்காவில் நூதன முறையில் பணநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் இந்த போன்ற சம்பவம் நடப்பது தெரியவந்துள்ளது. டாக்காவில் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் போது இரண்டு நபர்கள் காகிதம் ஒன்றை நீட்டி முகவரி கேட்டதாகவும் பெண் அதன்பின்பு அவர்கள் கூறுவதை மட்டும் தான் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து பார்த்த பிறகு தன்னிடம் இருந்த நகை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சியான அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் பெயரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இதுபோன்ற பல சம்பவம் அப்பகுதியில் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணையை தீவிர படுத்திய அதிகாரிகள் அறிவியல் பூர்வமான தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அதன்படி ஸ்கோபோலமைன் எனப்படும் ஒருவித வேதிப்பொருளை பயன்படுத்தி மனிதர்களை வசியம் செய்து அவர்களிடமிருந்து நகை பணத்தை கொள்ளையர்கள் நூதன முறையில் திருடி செல்வது தெரியவந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது எதிர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கோபோலமை தற்போது குற்றவாளிகள் பயன்படுத்துவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். சாத்தானின் சுவாசம் என்று பெயர் வைத்து அழைக்கப்படும் வகையிலான இந்த வேதிப்பொருள் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை ஸ்கோலமை தயாரிக்க கரு ஊமத்தம் பூவின் முக்கியமான மூலப்பொருள் மூலம் தயாரிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சிறு பேப்பர், துணி, கிரெடிட் கார்டு ஆகியவற்றில் லேசாக துகள் வடிவில் வைத்து முகர செய்தால் பத்து நிமிடத்திற்குள் சுயநினைவை இழக்க ஆரம்பித்து வசியமாகிவிடுவார்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வேதிப்பொருள் மூலமாக ஏற்படும் விளைவு என்பது ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை நீடிக்கும் எனவும் அதன் பின்பு தான் சுயநினைவை அவர்கள் அடைவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வேதிப்பொருள் எப்படி கிடைக்கிறது என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.