திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ரேவதி(44) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரரான கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது ரேவதி சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கதிர்வேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி கதிர்வேல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரேவதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேவதியை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.