
சின்னத்திரையில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரயான். இவர் ஹரி பாஸ்கர் நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது பிக் பாஸ்க்கு சென்று விட்டு உடல் மெலிந்து விட்டீர்களே சாப்பாடு கிடைக்கிறதா இல்லையா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரயான் “சாப்பாடு கிடைக்கும், ஆனால் அதற்கு டாஸ்க்கள் வைப்பார்கள். கிட்டதட்ட எல்லோருமே 10, 15 கிலோ குறைந்து தான் வெளியில் வருகிறார்கள். சிலர் எடை குறையும் என்ற நம்பிக்கையில் பிக் பாஸுக்குள் வருகிறார்கள்” என வேடிக்கையாக கூறியுள்ளார்.