
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெள்ளையப்பன் என்பவர் வசித்து வருகிறார். 80 வயதான வெள்ளையப்பனுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அவரது பிள்ளைகள் எழுதி வாங்கிக் கொண்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வெள்ளையப்பனுக்கு சாப்பாடு கொடுக்காமல் முறையாக பராமரிக்காமல் அவரை துன்புறுத்தி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து வெள்ளையப்பன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனது பிள்ளைகள் 10 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டனர். சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.