
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் வரஷா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று அஞ்சலி குமாரி மற்றும் ராகுல் பிரமோத் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் வீட்டின் சார்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மணமகள் வீட்டினர் சாப்பிடுவதற்கு முன்பாகவே சாப்பாடு அனைத்தும் காலி ஆகிவிட்டது. இதனால் கோபமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் தகராறு செய்தனர்.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்திவிட்டனர். இதனால் மாப்பிள்ளை உடனடியாக காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பெண் வீட்டாரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் காவல் நிலையத்திலேயே போலீசார் திருமணம் செய்து வைத்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.