
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. சிறந்த குழந்தை கூட செல்போன் இருந்தால்தான் அனைத்து வேலைகளும் நடக்கிறது. பெற்றோர்களும் அதனைப் போலவே பழக்கி விட்டனர். செல்போன் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் டிவியை விரும்பி பார்க்கின்றனர். இந்த நிலையில் டிவியில் மூழ்கிய மூன்று வயது மகளுக்கு தந்தை ஒருவர் நூதன தண்டனையை கொடுத்துள்ளார்.
ஜியா ஜியா என்ற அந்த குழந்தையை அவரின் தந்தை உணவருந்து அழைத்துள்ளார். ஆனால் குழந்தை வராததால் டிவியை ஆப் செய்தார். இதனால் குழந்தை அழத் தொடங்கியது. உடனே குழந்தையிடம் ஒரு பவுலை தந்து இதை கண்ணீரால் நிரப்பினால் மீண்டும் டிவி பார்க்கலாம் என்று கூறினார். இதனை சுதாரித்த அந்த குழந்தை உணவருந்த சென்றது.