நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 15 ரூபாயாக இருந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலங்களிலும் சில இடங்களில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனுடன் சேர்த்து மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பச்சை மிளகாய் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு வகைகள் 100 முதல் 150 ரூபாய் வரையும், பீர்க்கங்காய் விலை 80 ரூபாய், கத்தரிக்காய் 60 முதல் 70 ரூபாய், பீன்ஸ் 120 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இவ்வாறு தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்வு சாமானியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.