
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்த அட்டவணையை தயாரிப்பதில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இன்று மோதும் நிலையில்தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளையும் துபாய்க்கு செல்லுமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றால் தான் துபாயில் அரை இறுதி போட்டி நடைபெறும். நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் தான் போட்டி நடைபெறும்.
இருப்பினும் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அணியை தான் இந்தியா எதிர்கொள்ளும் என்பதால் இரண்டு அணிகளையும் துபாய்க்கு போக சொன்னது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியா மோதும் அணியை தவிர்த்து மற்றொரு அணி பாகிஸ்தானுக்கு திரும்பி வரவேண்டும் என்பதால் இருநாட்டு ரசிகர்களும் எதற்காக நாங்கள் அரை இறுதி நடைபெற இருக்கும் நிலையில் துபாய்க்கு செல்ல வேண்டும் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த அட்டவணை மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.