சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 4 வருடங்களுக்கு ஒருமுறை சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் நிலையில் அடுத்த வருடம் பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியா வரவில்லை எனில் சாம்பியன்ஷி தொடரில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அந்த போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்றும் ஐசிசியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி உலகக் கோப்பையுடன் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்த நிலையில் இஸ்லாமாபாத்தியில் இருந்து முதற்கட்ட பயணத்தை தொடங்க இருக்கிறது.

அதோடு காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் செல்ல இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில் இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஐசிசி அதற்கு தடை விதித்த உத்தரவிட்டது. இதற்கு ஜெய்ஷா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதோடு கிரிக்கெட்டில் தேவையில்லாமல் அரசியலை பாகிஸ்தான் புகுத்துவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியா கலந்துகொள்ளும் போட்டியை மட்டும் வேறு இடத்தில் வைக்க ஐசிசி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் இதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவிக்கவிடில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானுக்கு பதில் இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்புகள் இனிவரும் காலத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.