
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் என்னும் நகரில் ரக்ஷா பந்தன் அன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அப்போது நோ பார்க்கிங் இடத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது மேலும் பண்டிகை தினம் என்பதால் கூட்டம் நெரிசல் இருந்த பட்சத்தில் அப்பகுதி காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர்.
இதனால் ஆட்டோ டிரைவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது,”போலீசிடம்” ஏட்டிக்குப் போட்டியா பேசிய… அந்த டிரைவர் போதையில் இருந்ததால் செய்வதறியாமல்கோபத்தில் தனது ஆட்டோவை தானே தீ வைத்து எரித்தார்.
அதன்பின் ஆட்டோவிற்கு தீ வைத்ததால் டிரைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அப்போது போதையில் இருந்து தெளிந்த டிரைவர் தன்னை பழி வாங்குவதற்காக தன்னுடைய ஆட்டோவை காவல்துறையினர் தீ வைத்து எரித்தனர் என்று காவல்துறையினர் மீது குற்றம் சாட்டினார்.
மேலும் ஆட்டோவை தீ வைத்து எரித்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
उत्तर प्रदेश : जिला बुलंदशहर में दुकान के बाहर खड़े टेंपो का पुलिस ने चालान काट दिया। गुस्साए युवक ने अपने टेंपो में आग लगा दी।
पुलिस के अनुसार– टेंपो सड़क पर खड़ा होने से ट्रैफिक बाधित हो रहा था। pic.twitter.com/3F5VHkc8cC
— Sachin Gupta (@SachinGuptaUP) August 20, 2024