தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள கிராமத்தில் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமியை பார்த்த கண்ணன் வா நான் உன்னை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பி சிறுமியும் அவரது  மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இதனையடுத்து கண்ணன் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் ஒரு  புதருக்குள் அழைத்து சென்று  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த  சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி  அழுதார் . இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.