பாட்னாவில் இட ஒதுக்கீடு கோரி நடந்த பாரத் பந்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தர்பங்கா மற்றும் பக்சர் ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதோடு பாட்னா, ஹாஜிபூர், தர்பங்கா, ஜெகனாபாத் ஆகிய மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.

இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர்களை போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீர் பீச்சு அடித்தும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பாட்னா எஸ்.எஸ்.பி ராஜூ மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மாதேபுரா, பெகுசராய் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் சாலை மறியலில் ஈடுபட போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களையும் பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.