சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அசாமில் மாணவர் அமைப்புகள் இந்த சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (மார்ச் 12) சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதிற்கு எதிராக டார்ச் லைட் பேரணி, சத்தியாகிரகம் உள்ளிட்ட வழிமுறைகளில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், அங்கு 16 எதிர்க்கட்சிகள் மாநில அளவிலான கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லி, உ.பி, வட கிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.