மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பரதேசி புரா என்னும் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை சோனு என்ற வாலிபர் உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக சென்றார். அங்கு சோனு மருத்துவரிடம் தன் உடம்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி பின்னர் அவருக்கு மருத்துவர் சிகிச்சை கொடுத்தார்.

அவர் சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கும் போதே திடீரென வாலிபர் மருத்துவரின் காலடியிலேயே மயங்கி விழுந்தார். அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது இறந்தது தெரியவந்தது. நாட்டில் சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பினால் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது மருத்துவர் கண் முன்னே வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதமாக இருக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.