
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவன ம் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி .இவர் கடந்த ஜூலை 10ஆம் தேதி என்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து ரவிச்சந்திராவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தீவிரமாக தேடி வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பாக போலீசார் ரவிச்சந்திராவை ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் ரவிச்சந்திரா சிஇஓவாக உள்ள கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நிதி சிக்கல் காரணமாக ரவிச்சந்திராவின் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது. இதனால் கோவம் அடைந்த சில ஊழியர்கள் தான் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தி உள்ளார்கள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.