தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா நடிப்பது மட்டுமின்றி பல்வேறு பிசினஸ் செய்து வருவதோடு தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் முன்னதாக சமந்தாவுக்கு தான் வாய்ப்பு சென்றதாகவும் ஆனால் அந்த பட வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது முழு ‌ நேர தயாரிப்பாளராக மாற சமந்தா திட்டமிட்டுள்ளதாகவும் அதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைவசம் வைத்துள்ள வெப் தொடரை மட்டும் நடித்து முடித்துவிட்டு தயாரிப்பில் முழு கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகி தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.