கேரள மாநிலம் கண்ணூரில் மழையின் காரணமாக சாலை வழுக்கியதால் கார் விபத்தில் சிக்கியது.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரம் அங்கு மழை பெய்தது. இந்த நிலையில் திடீரென சாலை வழுக்கியதால் கார் வேகமாக வந்து அங்கிருந்த மின்கம்பம் மற்றும் கடை மீது மோதியது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.