
கேரள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சுரேஷ்கோபி தமிழிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய பாஜக அரசு இணை மந்திரி பதவியை கொடுத்து அழகு பார்த்தது. இந்நிலையில் சுரேஷ்கோபி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இன்னும் 22 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளேன். எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த பேப்பரை வாங்கி அமித்ஷா கோபத்தில் தூக்கி வீசி உள்ளார்.
இதன் காரணமாக சுரேஷ்கோபி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நடிப்புதான் என்னுடைய ஃபேஷன். சினிமா இல்லையெனில் நான் இறந்து விடுவேன். எனவே எனக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க அனுமதி வழங்க வேண்டும். ஒருவேளை சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறினால் நான் பணிவுடன் மகிழ்ச்சியுடனும் மந்திரி பதவியை விட்டு விலகி விடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் சுரேஷ்கோபி மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிக்கை வெளியிட்டது பாஜக மேலிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.