
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பத்து தல திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நடிகர் சிம்பு உள்ளிட்டோர் பண உதவி செய்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.