
ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி20 அணிகளையும் சிறந்த வீரர், வீரர்களையும் தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பது வழக்கம். குறிப்பிட்ட அந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனையான இவர் 2024 ஆம் வருடத்தில் மட்டும் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களை அடித்துள்ளார். அதோடு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 747 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.