குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என DGP சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களிடம் இரு விரல் கணேத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை.

அந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை. நான்கு குழந்தை திருமணங்கள் நடந்தது என்பது உண்மை. இதற்கான ஆதாரங்கள் இருந்தன. அதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.