கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி  7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மாதேஷ்(29) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சிறுமி இந்த திருமணம் பிடிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும்  கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என பாட்டி வீட்டிலேயை தங்கி இருந்தார்.

இதனால் கோபம் அடைந்த மாதேஷ் தனது அண்ணன் மல்லேஷ்(38) மற்றும் உறவினர்களுடன் இணைந்து சிறுமியை  குண்டுகட்டாக தூக்கி சென்றார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது . இந்த நிலையில்  தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் சிறுமியின் பாட்டியிடம் விசாரனை நடத்தினர். அதன் பிறகு சிறுமியின்  பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில்  மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ்,  சிறுமியின் தாய் , தந்தை மற்றும் மல்லேஷ் மனைவி முனியம்மாள் ஆகிய  ஐந்து பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.