2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் நீதிபதி விஜயகுமாரி வைரவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வைரவேல் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.