
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜரிவாலுக்கு தேவையான மருந்துகளை வழங்க சிறைத்துறை நிர்வாகம் மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணமடைய செய்வதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது. அவரின் உடல் உறுப்புகளுக்கு சேதம் விளைவிப்பதற்கான சதித்திட்டம் சிறையில் நிகழ்கிறது என்று குற்றம் சாட்டினார்.