
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிலிண்டர் இணைப்பை பெரும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9. 60 கோடி பேர் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியமும் வழங்கப்படும் நிலையில் மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அண்மையில் 200 ரூபாய் குறைத்தது.
இதனைத் தொடர்ந்து உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைந்துள்ளது. இவர்களின் சிலிண்டர் மானிய தொகை வங்கி கணக்கில் மாதம்தோறும் வரவு வைக்கப்படும் நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உஜ்வாலா திட்ட பயனாளிகள் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் இந்த பணியை முடிக்கவில்லை என்றால் மானிய தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.