
பிப்ரவரி 1 இன்று முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வது தவிர பல்வேறு துறைகளை பாதிக்கும் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி விலைகளை மாற்றி அமைக்கும். விலைகள் அதிகரிக்குமா, குறையுமா என்பது தெரியவில்லை.
ஜனவரி ஒன்றாம் தேதி 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. இதே போல வீட்டு சிலிண்டர்களுக்கும் மாற்றங்கள் பொருந்துமா என இந் நுகர்வோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக யூபிஐ அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பிப்பு வருகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ பரிவர்த்தன ஐடிகள் தொடர்பான விதி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
சிறப்பு எழுத்துக்கள் கொண்ட ஐடிகளை பயன்படுத்தி பணம் செலுத்துதல் நிராகரிக்கப்படும். ஏனென்றால் பரிவர்த்தனை வடிவங்களை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த புதுபிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாருதி சுசுகி விலை உயர்கிறது. பல்வேறு கார் மாடல்களின் விலைகளை உயர்த்த மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது. இது மாருதி காரை வாங்க வாங்க நினைப்பவர்களின் முடிவுகளை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கோட்டக் மகேந்திரா வங்கி அதன் வங்கி சேவை கட்டணங்களில் அறிவித்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வரும். இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கான புதுப்பிப்புகளும் அதில் அடங்கும். அடுத்ததாக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் ஏவியேசன் டர்பைன்ட் எரிபொருள் விலைகளை திருத்த இருப்பதால் விமான பயண செலவுகளை பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயரும் பட்சத்தில் விமான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.