
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த சின்ன கருப்பு, மகேந்திரன், சதீஷ்குமார், அன்புராஜ் மற்றும் வீரலட்சுமி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.