
நடிகர் சிவகார்த்திகேயன் பல முயற்சிகளின் பலனாக மக்கள் மனதில் இடம் பிடித்து கதாநாயகனாக மாறி உள்ளார். தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இயக்குனர் வசந்த பாலன் தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனாவால் பாதிக்கப்படும் போது பலரும் தனக்கு உதவ முன் வந்தனர் எனவும் அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் என தெரிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு இருந்ததால் அதுவே கவர் ஆகிவிட்டது என கூறிய அவர் தன்னுடன் எந்த விதத்திலும் சம்மதம் இல்லாதவராக இருந்த போதிலும் சிவகார்த்திகேயன் தனக்கு உதவ முற்பட்டது மிகப்பெரிய விஷயம் என பாராட்டியுள்ளார்.