
பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட புல்லட் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது காதலியை அமர வைத்து கட்டிப்பிடித்தபடி ஒரு வாலிபர் டிரைவிங் செய்துள்ளார். போக்குவரத்து மிகுந்த சாலையில் அநாகரிகமாக கட்டிப்பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.