உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. கடந்த 21-ஆம் தேதி அந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக தடபுடலாக உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது.

இந்த நிலையில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த வாலிபரை கைது செய்தனர். அந்த நபரின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.