தாய்லாந்தின் பட்டாயா நகரில், ஒரு சீன ஜோடி நடுத்தெருவில் நிர்வாணமாக பாலியல் உறவு வைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ ஜிஹாங் (67) மற்றும் லின் டிங் டிங் (35) என்ற இருவரும், புகழ்பெற்ற Walking Street நுழைவாயிலின் அருகே ஒரு பாதையில், broad daylight-இல் டிரைப்பாட் வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

அவர்களது செயலை கண்டு அதிர்ந்த பாதுகாவலர் ஒருவர், புகைப்படம் எடுத்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் ஹோட்டலில் இருந்த அவர்களை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் ஜிஹாங், “நான் உலகம் முழுவதும் நிர்வாண புகைப்படங்கள் எடுக்க விரும்பும் புகைப்படக் கலைஞன். பல நாடுகளில் இதுபோன்றது செய்துள்ளேன்” என தெரிவித்தார். போலீசார் கூறுகையில், பொது இடத்தில் அருவருக்கத்தக்க  நடத்தை காரணமாக இருவருக்கும் இந்திய மதிப்பில் தலா 12,800 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், அவர்கள் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தால், 10 ஆண்டு சிறை மற்றும்  இந்திய மதிப்பில் 2,56,000 அபராதம் விதிக்கப்படலாம். சுற்றுலா பயணிகள் தங்களின் நடத்தை மற்றும் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.