தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். சிம்ரன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிம்ரன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது, என்னுடைய சக நடிகைக்கு மெசேஜ் செய்தேன். உங்களை அந்த ரோலில் பார்ப்பது அதிர்ச்சியாக இருந்தது என்று. உடனே அவர் ஆன்ட்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என ரிப்ளை செய்தார்.

எனக்கு அது வித்தியாசமாக தோன்றியது. ஆன்ட்டி ரோல், அம்மா ரோலில் நடிப்பதை விட டப்பா ரோலில் நடிப்பது தான் மோசம். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்திலேயே நான் அம்மாவாக நடித்து விட்டேன்.

நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்கு எப்போதும் நம்பிக்கை தேவை என சிம்ரன் ஆவேசமாக பேசியுள்ளார். சிம்ரன் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.