
டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஹிந்தி தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ரவி கலந்து கொண்ட போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. அதாவது திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சம்பவத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் தாய் வாழ்த்தை அறிமுகப்படுத்திய போது அதில் குறிப்பிட்ட சிலரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக சில வரிகளை நீக்கினார்.
ஆனால் இன்று கவர்னர் கலந்து கொண்ட டிடி தமிழ் ஹிந்தி தின விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை அவமதிக்கும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாடலை ஒலிபரப்பியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடே கொதித்தெளும் வகையில் நடந்துள்ளது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் என்று விடாது. அதேபோன்று வரிகளை நீக்கி பாடினால் திராவிடம் வீழ்ந்து விடாது. இதை புரிந்து கொள்ளாத ஆரியனர் அண்ணா வழியில் கண்ணியம் தவறாமல் நடக்கும் நம் தலைவருக்கு பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்க நினைக்கும் அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள்.
ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில்,…
— Udhay (@Udhaystalin) October 18, 2024