தமிழகத்தின் முதல்வராக திருமாவளவன் ஒருபோதும் ஆக முடியாது என்று மத்திய மந்திரி எல். முருகன் கூறினார். இதற்கு சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு எல். முருகன் மத்திய மந்திரி ஆக இருக்கும்போது, திருமாவளவனால் மட்டும் ஏன் முதல்வராக முடியாது என்று கேள்வி எழுப்பினார். அதோடு கண்டிப்பாக நாங்கள் திருமாவளவனை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவோம் என்றும் கூறினார். ஏற்கனவே திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும் நிலையில் தற்போது திருமாவளவனுக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தற்போது சீமான் திருமாவளவனை முதல்வராக்குவோம் என்று கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, சீமானின் பேச்சை பெரிதுபடுத்த தேவையில்லை. சீமான் விரிக்கும் வலையில் திருமாவளவன் ஒருபோதும் விழமாட்டார். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தலாம் என்ற சீமானின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. மேலும் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார்.