
பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில் தான் உள்ளது .காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து தேர்தலில் போட்டியிடாததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இனி தேர்தலை சந்திக்க வேண்டும். ஈரோட்டில் எதிரணி வேட்பாளர்கள் 44 பேர் டெபாசிட் இழந்ததற்கு திராவிட மாடல அரசுக்கு நன்றி. ஈரோட்டில் பண பட்டுவாடா நடைபெற்றது என்று சீமான் சொல்வதை ஏற்க முடியாது. அதிமுக போட்டியிடாத போது அந்த வாக்கு சீமானுக்கு செல்லவில்லை. தவளை தன் வாயால் கெட்ட கதையாக உள்ளது. பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று பேசியுள்ளார்.