நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றிய சர்ச்சைக்குரிய  வகையில் பேசி வருகிறார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் சீமானுக்கு எதிராக போராட்டங்கள் கூட வெடித்தது. இருப்பினும் சீமான் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதமாகவே பேசி வருகிறார் என்று அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. அதோடு சீமான் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால் தான் அவருக்கு நிதானம் வரும் என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் பற்றி நிதானமாக பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சல் ஊட்டும் விதமாக பேசுவது தான் சீமானின் வழக்கமாக இருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.