
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததாகவும், அவருடன் சேர்ந்து உணவு உண்டதாகவும், உரையாடியதாகவும் செல்வதெல்லாம் பொய் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி சொல்லியுள்ளார். மேலும், தமிழர் – திராவிடர் என பிரிவினை ஏற்படுத்தி மக்களை கூறு போடுகிறார். விடுதலை புலிகள் கொடியை கட்சி கொடியாக பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும்.
கடந்த 14 ஆண்டுகளாக இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி எதுவும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். திருமுருகன் காந்தி இப்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.