தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் பெரியார் குறித்து விமர்சனம் செய்து வருவதால் அரசியல் பிரபலங்கள் பலரும் சீமானை விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னிடம் வெடிகுண்டு உள்ளது, அதனை எறிந்தால் அந்த இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது, நான் கொலைவெறியில் இருக்கின்றேன் என கூறுகின்றார்.

தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்துக்காட்டி ஈரோடு மக்களை அவர் அவமதிக்கின்றார். அவர் முன்னாடி மைக்கை நீட்டிட்டால் போதும் குரங்கு டான்ஸ் ஆடுவது போல ஆட்டம் ஆடுகிறார். தந்தை பெரியாரை சீமானை விட புகழ்ந்தவர்கள் யாருமே கிடையாது. சீமானுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவரே திருமாவளவன் தான். ஆனால் சீமான் தற்போது திருமாவளவனை திட்டிக் கொண்டிருக்கிறார். சீமான் தற்போது குழம்பிப் போய் உள்ளார் என்று புகழேந்தி  விமர்சனம் செய்துள்ளார்.